மாருதி சுசுகியின் லிமிட்டெட் எடிஷன் கார் அறிமுகம்

மாருதி சுசுகியின் லிமிட்டெட் எடிஷன் கார் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்களான VXI மற்றும் VDI ட்ரிம்கள் மட்டுமே லிமிட்டெட் எடிஷன்களாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் சில காஸ்மெடிக் அப்டேட்கள், அலாய் வீல்கள், புதிய டூயல் டோன் இன்டீரியர் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. புதிய எர்டிகா 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா லிமிட்டெட் எடிஷனில் வழங்கப்பட்ட அம்சங்களை பொதுவாக கொண்டிருக்கிறது. 
 
வெளிப்புற தோற்றம் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கும் நிலையில், மாருதி சுசுகி எர்டிகா சில அம்சங்கள் டாப் என்ட் மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஃபாக்லேம்ப்களுக்கு க்ரோம் கார்னிஷ், ட்வின் 5-ஸ்போக் அலாய் வீல்கள், பின்புறம் ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் லிமிட்டெட் எடிஷன் பேட்ஜ் கொண்டுள்ளது.
 
 
புதிய லிமிட்டெட் எடிஷன் எர்டிகா மாடல் எக்ஸ்குசிட் மரூன், சில்கி சில்வர் மற்றும் சுப்பீரியர் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. உள்புற கேபின் சில காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டுள்ளது. சென்ட்டர் கன்சோல், டோர் பேனல்களில் மரத்தாலான ஸ்டைலிங், டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 
 
இத்துடன் ஸ்டீரிங் வீலில் லெதர் ஸ்டிகராப் மற்றும் உள்புறம் வைட் ஆம்பியன்ட் லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை அனைத்தும் VXI மற்றும் VDI  மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் 2 DIN MP3 ஆடியோ மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், 4 பவர் வின்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய மாருதி சுசுகி எர்டிகா மாடலிலும் 1.4 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இனஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 94 பிஹெச்பி பவர், 130 என்எம் டார்கியூ மற்றும் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 
 

 

இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா லிமிட்டெட் எடிஷன் விலை ரூ.7.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் 9.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.