ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வரவை தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் சேவை கட்டணங்களை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் டேட்டாவையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 

90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தின் விலை ரூ.429 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது.  

ஜியோவின் ரூ.399 விலையில் வழங்கப்படும் சலுகைக்கு போட்டியாக புதிய பி.எஸ்.என்.எல். திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும், 84 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 

\"\"

இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் ஜியோ திட்டத்தை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். சார்பில் விசேஷ வவுச்சர்களும் வழங்கப்படுகிறது. இவை நிமிடத்திற்கு 15 பைசாவில் வாய்ஸ் கால்களின் விலையை குறைக்கும். அதன்படி பி.எஸ்.என்.எல். எஸ்.டி.வி. ரூ.8 ரீசார்ஜ் செய்து பி.எஸ்.என்.எல். அழைப்புகளை நிமிடத்திற்கு 15 பைசாவில் 30 நாட்களுக்கு மேற்கொள்ள முடியும்.

பி.எஸ்.என்.எல். எஸ்.டி.வி. திட்டத்தின் பி.எஸ்.என்.எல். நம்பரில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் நிமிடத்திற்கு 35 பைசாவில் மேற்கொள்ள முடியும். ரூ.19 விலையில் பி.எஸ்.என்.எல். விசேஷ வவுச்சர்களை 90 நாட்களுக்கு பெற முடியும். இதிலும் பி.எஸ்.என்.எல். அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 15 பைசாவும், மற்ற நெட்வொர்க்களுக்கு 35 பைசாவிற்கு மேற்கொள்ள முடியும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.