ரிலையன்ஸ் ஜியோ இலவச போன்: உடனே முன்பதிவு செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ இலவச போன்: உடனே முன்பதிவு செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜியோபோனின் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட இருக்கும் ஜியோபோனினை வாடிக்கையாளர்கள் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 
 
எனினும் ஜியோபோன் 4ஜி பீச்சர்போனினை ரிலையன்ஸ் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் ஜியோபோன் வாங்க முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஜியோபோன் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
\"\"
 
ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்துள்ள தகவல்களின் படி ஜியோபோன் வாங்க விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்பத்தை எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் விருப்பத்தை தெரிவிக்க வாடிக்கையாளர் தனது மொபைல் போனில் இருந்து \"JP<>பகுதி தபால் எண்<>உங்கள் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ஜியோ ஸ்டோர் கோட்\" உள்ளிட்டவற்றை டைப் செய்து 7021170211 என்ற எண்ணிற்கு அனுப்ப வேம்டும். 
 
உங்களுக்கு அருகாமையில் உள்ள ஜியோஸ்டோர் கோடினை நேரடியாக சென்றும் தெரிந்து கொள்ள முடியும். இதுதவிர அதகாரப்பூர்வ ஜியோ இணைத்தளம் சென்று \"Keep me posted\" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஜியோபோன் முன்பதிவு சார்ந்த தகவல்கள் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். 
 
புதிய ஜியோ பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை மாதம் ரூ.153க்கு வழங்குகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ ரீசார்ஜ் சலுகைகளும் ரூ.24 மற்றும் ரூ.54 விலையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் டேட்டா மற்றும் அழைப்புகளை முறையே இரண்டு மற்றும் ஏழு நாட்களுக்கு பெற முடியும். 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.