ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு: முழு தகவல்கள்

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு: முழு தகவல்கள்

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜியோ அறிவித்துள்ள கேஷ்பேக் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கும், இவற்றை அடுத்த ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஜியோ தீபாவளி சலுகையானது அக்டோபர் 12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தீபாவளி சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் (மதிப்பு ரூ.400) வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை கூப்பன்களை நவம்பர் 15-ம் தேதி முதல் ஒரு சமயத்தில் ஒரே கூப்பன் மட்டுமே பயன்படுத்த முடியும்.

\"\"

ஜியோ சலுகைகளின் வேலிடிட்டியை பொருத்து தீபாவளி சலுகை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டம் நிறைவுற்றதும் புதிய தண் தணா தண் வேலிடிட்டி துவங்கும். அதாவது நவம்பர் 12-ம் தேதி உங்களது தற்போதைய திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் தீபாவளி சலுகை அதே நாள் முதல் ஆக்டிவேட் ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 திட்டத்தின் கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி 1ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி-யாக குறைக்கப்பட்டு விடும். 

ரிலையன்ஸ் ஜியோ தனது சலுகைகளை அக்டோபர் 19-ம் தேதி முதல் மாற்றியமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதாக இருக்குமா என்ற அச்சத்தை தவிரிக்க விரும்புவோர் ஜியோ தீபாவளி சலுகையை பெறுவது நல்ல முடிவாக இருக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.