ரிவர்ஸ் மோட் கொண்ட வெஸ்பா எலெட்ரிகா அறிமுகம்

ரிவர்ஸ் மோட் கொண்ட வெஸ்பா எலெட்ரிகா அறிமுகம்

பியாஜியோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தாலியில் நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடலின் கான்செப்ட் 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்திருந்தது. 

புதிய வெஸ்பா எலெட்ரிகா எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5.2bhp மற்றும் 2.6bhp செயல்திறன் கொண்டிருக்கிறது, இந்த இன்ஜின் வழக்கமான ஸ்கூட்டர்களில் வழங்கப்படும் 500சிசி செயல்திறனுக்கு சமமானதாகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இகோ மோட் மிதமான வேகம் அதாவது மணிக்கு 30 கிலோமீட்டர் வரை செல்லும், பவர் மோட் முழுமையான வேகத்தில் செல்லும். இத்துடன் இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. 



இந்த எலெக்ட்ரிக் மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரியை நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சம் கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறை பிரேக் செய்யும் போது பேட்டரி சார்ஜ் செய்யப்படும். 

ஸ்டான்ர்டு மற்றும் X என இரண்டு மாடல்களில் வெஸ்பா எலெட்ரிகா கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு எலெட்ரிகா மாடல் 100 கிலோமீட்டர் வரை செல்லும், எலெட்ரிகா X 200 கிலோமீட்டர் வரை செல்லும். கூடுதலாக பெட்ரோல் பவர் ஜெனரேட்டர் மூலம் பயணிக்க முடியும். 



பியாஜியோ எலெட்ரிகா X மாடலில் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேன்க் வழங்கப்பட்டுள்ளதால் சிறிய பேட்டரி வழங்கபப்ட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் 48 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த மாடலில் பேட்டரி தீர்ந்து போனால் தானாக ஜெனரேட்டர் ஆன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர்களில் பியாஜியோ வழங்கியுள்ள பேட்டரிகளை 1000 முறை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

இதுதவிர எல்இடி ஹெட்லைட், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, சீட் ஸ்டோரேஜ், யுஎஸ்பி சாக்கெட், 12 இன்ச் முன்பக்க வீல் மற்றும் 11 இன்ச் பின்புற சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. பியாஜியோ எலெட்ரிகா தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், மார்ச் 2018-ம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.