ரூ.199க்கு அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்

ரூ.199க்கு அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி / 3ஜி / 2ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை ரூ.199க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இத்துடன் வாடிக்கையாளர்கள் தினமும் 300 நிமிடங்கள் அதாவது வாரத்திற்கு 1200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். கூடுதலாக ரூ.178 விலையில் மற்றொரு திட்டத்தை புதிய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
 
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி / 3ஜி / 2ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் முதல் இரண்டு ரீசார்ஜ்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
\"\"
 
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.149 திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
முன்னதாக ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு 112 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. எனினும் இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலியில் ஆஃபர்கள் பகுதியில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 
 

 

இதுதவிர ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ரூ.549 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் ரூ.799 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.