ரூ.299க்கு அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்.: ஆர்காம் அதிரடி

ரூ.299க்கு அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்.: ஆர்காம் அதிரடி

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண் சலுகை நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகையை அறிவித்து வருகின்றன. எனினும் இவை தண் தணா தண் சலுகையை போன்றே இருக்கிறது. விலையை மட்டும் மாற்றி, சில சேவைகளை மாற்றியமைத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. 
 
அந்த வகையில் ஆர்காம் நிறுவனமும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் ஆர்காம் புதிய திட்டத்தின் விலை ரூ.299 என நிர்ணயம் செய்துள்ளது. ரிலையன்ஸ் மொபைல் நிறுவனத்தின் விலை குறைந்த சலுகையாக இருக்கிறது.  
 
ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களை தொடர்ந்து ஆர்காம் நிறுவனமும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆர்காம் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள டீசர் புகைப்படத்தில் ரூ.299 விலையில் அன்லிமிட்டெட் கால்ஸ், குறுந்தகவல் மற்றும் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய சலுகை சார்ந்த முழு தகவல்களை ஆர்காம் வெளியிடவில்லை.
 
\"\"
 
அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் கடந்த காலங்களை விட மிக மோசமான நட்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு இதற்கு முகேஷ் அம்பானியின் ஜியோ வழங்கிய இலவசங்கள் தான் காரணம் என்றும் மறைமுகமாக குற்றஞ்சாட்டியது.
 
முன்னதாக ஆர்காம் நிறுவனம் டாங்கிள் வாங்குவோருக்கு புதிய சலுகைகளை அறிவித்தது. புதிய டாங்கிள்களை வாங்குவோருக்கு 4ஜி சிம் கார்டு மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா ரூ.5,199க்கு வழங்கப்பட்டது. இதேபோல் வைபாட் டாங்கிள் ரூ.3,200க்கு 365 நாள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம் கார்டு தினமும் 1 ஜிபி டேட்டா ரூ.500க்கு வழங்கப்படுகிறது.   
 

 

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் சலுகை ரூ.399க்கு அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுதவிர ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைப்பிற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.