ரூ.550 கோடி நட்டம், காரணம் ஜியோ: ஏர்டெல் அடாவடி

ரூ.550 கோடி நட்டம், காரணம் ஜியோ: ஏர்டெல் அடாவடி

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் காலாண்டிற்கு ரூ.550 கோடி வரை ஏர்டெல் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. 
 
முன்னதாக இன்டர்கனெக்ஷன் கட்டணங்களின் மூலம் பாரதி ஏர்டெல் லாபம் ஈட்டுவதாக ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை முற்றிலும் மறுத்த ஏர்டெல், ஜியோ மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளால் நிமிடத்திற்கு 21 பைசா வீதம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு இழப்பீடு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் ரூ.550 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
மொபைல் டெர்மினேஷன் கட்டணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஜியோவின் எண்ணம் மற்றும் மலிவு விலை சலுகைகள் மூலம் போட்டியை பலப்படுத்துவது வஞ்சனையான ஒன்றாக இருக்கிறது என்றும் பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.  
 
மேலும் ஏர்டெல் லாபம் ஈட்டுவதாக கூறப்படும் ஜியோவின் தகவல்கள் முற்றிலும் பொய் என்பதோடு, நகைச்சுவையான ஒன்று என ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் இன்டர்கனெக்ஷன் பயன்பாட்டு தொகையில் மட்டும் ரூ.73,000 கோடிகளை வருமானமாக ஈட்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தது. 
 
அழைப்புகளை முழுமையாக்க ஒரு டெலிகாம் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கும் தொகையை இன்டர்கனெக்ஷன் கட்டணம் ஆகும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.