விரைவில் விற்பனைக்கு வரும் பியாஜியோவின் புதுவரவு வெஸ்பா நோட்

விரைவில் விற்பனைக்கு வரும் பியாஜியோவின் புதுவரவு வெஸ்பா நோட்

பியாஜியோவின் வெஸ்பா நோட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. 125சிசி பிரிவில் வெளியாகி இருக்கும் புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வழக்கமான வெஸ்பா மாடல்களை போன்று புதிய வெஸ்பா நோட் மாடலும் மோனோக் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவில் ஹெட்லேம்ப் மற்றும் எலிகண்ட் கோடுகளுடன் இதன் ஸ்டைலிங் VXL மாடல் போன்று காட்சியளிக்கிறது. மற்ற மாடல்களை விட வித்தியாசப்படுத்த புதிய மாடலில் சினிஸ்டர் போன்ற மேட் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
 
இதன் அலாய் வீல்களில் மூன்று-ஸ்போக் கொண்ட பேட்டன் கொண்டிருக்கிறது. இதன் பின்புற பகுதியும் பார்க்க சுத்தமாகவும், கிராப் ரெயில் வெற்றிடமாக இருக்கிறது. புதிய ஸ்கூட்டரில் 125சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. CVT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி பவர், 9.9 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.
 
இத்துடன் முன்பக்கம் 11 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் சக்கரங்களும், இருபுறமும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வெஸ்பா நோட் விலை ரூ.90,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.