வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?

சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது இயல்பு.

அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா?

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?

 

 • சித்திரை

 

 • வைகாசி

 

 • ஆவணி

 

 • ஐப்பசி

 

 • கார்த்திகை

 

 • தை

 

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது?

 

 • திங்கட்கிழமை

 

 • புதன் கிழமை

 

 • வியாழன் கிழமை

 

 • வெள்ளிக் கிழமை

 

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது?

அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?

 

 • ரிஷபம்

 

 • மிதுனம்

 

 • கன்னி

 

 • விருச்சகம்

 

 • கும்பம்

 

எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்?

 

 • ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.

 

 • ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் இராவணன் தனது கோட்டையை இழந்தார்.

 

 • புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

 

 • மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தன்து ராஜ்ஜியத்தை இழந்தார்.

 

 • மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்க முற்றார்.

 

 • பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை எரித்த மாதமாகும்.

 

குறிப்பு

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.