வீட்டிலேயே செய்யும் இயற்கை பேஷியல்கள்

வீட்டிலேயே செய்யும் இயற்கை பேஷியல்கள்

வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் பேஷியல்களால் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய பேஷியல்களை பற்றி பார்க்கலாம்.
 
* உலர்ந்த சருமத்திற்கு தினமும் பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 - 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.
 
* பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது. இதற்கு தினமும் பச்சை நிற ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் நன்றாக காய்ந்தவுடன் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
 
* கடலை மாவு கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும்.
 
* தேன் தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.
 
* 1 தேக்கரண்டி கடலை எண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.
 
* கண்களுக்கு கீழே கருவளையத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.