வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகள்: பலன்கள் தெரியுமா?

வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகள்: பலன்கள் தெரியுமா?

நம்மில் பலரும் சாப்பிடும் உணவுகளில் வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும் அதனால் எவ்வளவு பலன்கள் உள்ளது என்பதும் தெரியுமா?

கத்திரிக்காய்

பிஞ்சு கத்திரிக்காய் சமைத்து சாப்பிடலாம்.அதில் உள்ள விட்டமின்கள் தசை மற்றும் ரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாயு, பித்தம், கபம் போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிஞ்சு கத்திரிக்காயை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அவரைக்காய்

பல வகையில் உள்ள அவரைக்காயில், வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகளின் பத்திய உணவாக பயன்படுகிறது.

அதிக உடல் சூடு மற்றும் உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், நார்ச்சத்து உள்ள இந்த அவரைக்காயை சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

வெண்டைக்காய்

விட்டமின் B, C, உயிர்சத்துக்களை கொண்ட வெண்டைக்காயுடன் சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இது உடலின் சூட்டை தணித்து, குளிர்ச்சியை ஏற்படுத்தி, உஷ்ண இருமல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

புடலங்காய்

நீர்ச்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது ஜீரணசக்தியை அதிகரித்து, வாதம், பித்தம், கபம் போன்ற திரிதோஷத்தை போக்கும்.

மேலும் இது வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி ஆகியவற்றை போக்கி, காமத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

வாழைத்தண்டு

நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால், அது பித்தம், வாதம் மற்றும் உடல் சூட்டை தணித்து, குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவற்றை நீக்க உதவுகிறது.

எனவே தினமும் வாழைத்தண்டு பச்சடி போன்று செய்து சாப்பிட்டு வரலாம்.

தேங்காய்

தேங்காயில் பல நன்மைகள் உண்டு. இதில் விட்டமின் A, B சிறிதளவு உள்ளது. எனவே இது குடல் புண்ணையும் ஆற்றும் தன்மைக் கொண்டது.

இத்தகைய சத்துக்களை கொண்ட தேங்காயின் வழுக்கையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை தடுக்கலாம்.

சுரைக்காய்

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி தன்மையை ஏற்படுத்தும்.

கடுஞ்சுரைக்காய் உடலுக்கு குளுமையை ஏற்படுத்தி, தாகத்தை அடக்கும். மேலும் இது பித்தத்தையும் போக்கும். இதன் விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாட்டை தடுக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.