வைபை கண்டறியும் புதிய வசதி: பேஸ்புக்கில் சேர்ப்பு

வைபை கண்டறியும் புதிய வசதி: பேஸ்புக்கில் சேர்ப்பு

பேஸ்புக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஃபைண்டு-வைபை எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் பதிப்பில் புதிய வசதியை சோதனை செய்யும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.
 
உலகம் முழுக்க ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான பேஸ்புக் செயலியில் ஃபைண்டு-வைபை அம்சம் வழங்கி வருகிறோம். பயணம் செய்யும் மக்களுக்காகவும், டேட்டா வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பேஸ்புக் பயன்படுத்தவும் இந்த சேவையை கடந்த ஆண்டு சில நாடுகளில் வழங்கினோம்.  
 
\"\"
 
ஃபைண்டு-வைபை அம்சம் வாடிக்கையாளர்களின் அருகாமையில் இருக்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை தேடும். இதனால் மொபைல் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் வைபை சேவையை தேடுவது எளிமையாக இருக்கும் என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
 
வைபை ஹாட்ஸ்பாட்களை கண்டறிய பேஸ்புக் செயலியில் \"More\" ஆப்ஷனில் \"Find Wi-Fi\" கிளிக் செய்து ஆப்ஷனை ஆன் செய்யலாம். இனி அருகாமையில் உள்ள ஹாட்ஸ்பாட் மேப்களை பிரவுஸ் செய்யலாம். 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.