வோடபோன் சூப்பர்வீக் ரூ.87 புதிய திட்டம் அறிவிப்பு

வோடபோன் சூப்பர்வீக் ரூ.87 புதிய திட்டம் அறிவிப்பு

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகி்ன்றன. முன்னதாக பாரதி ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்த நிலையில், வோடபோன் நிறுவனமும் தன்பங்கிற்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 
 
வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்ட்டுள்ள புதிய சலுகை ரூ.87 விலையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை திட்டத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 250 எம்பி மொபைல் டேட்டாவும் மற்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.    

வோடபோன் சூப்பர்வீக் திட்டத்தில் ரூ.87 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் வோடபோன் எண்களுக்கு வாய்ஸ் கால்களும், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 100 நிமிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. 

\"\"

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ப 250 எம்பி மற்றும் 50 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சூப்பர்வீக் திட்டம் ஏழு நாள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் புதிய சூப்பர்வீக் திட்டத்தை *444*87# எனும் USSD கோடி என்டெர் செய்து ஆக்டிவேட் செய்ய முடியும்.  

இத்துடன் ரூ.7 சூப்பர் ஹவர் திட்டம் ஒன்றும் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குறைந்த காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் சலுகைகளை வழங்குகிறது. வோடபோன் எண்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் அழைப்புகளும், அன்லிமிட்டெட் 4ஜி / 3ஜி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி ஒரு மணி நேரம் ஆகும்.

ஜியோ வழங்கும் ரூ.399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றொரு ஜியோ திட்டத்தில் ரூ.309 விலையில் 1ஜிபி 4ஜி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே திட்டத்தி்ல் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.