வோடபோன் மற்றும் லாவா இணைந்து ரூ.900 கேஷ்பேக் வழங்குகின்றன: உடனே பெறுவது எப்படி?

வோடபோன் மற்றும் லாவா இணைந்து ரூ.900 கேஷ்பேக் வழங்குகின்றன: உடனே பெறுவது எப்படி?

வோடபோன் இந்தியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் பீச்சர் போன் நிறுவனங்களுடன் இணைந்து வாய்ஸ் கால்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் வெளியீட்டை தொடர்ந்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன. 

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் லாவா மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து 2ஜி பீச்சர்போன் வாங்குவோருக்கு வாய்ஸ் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து புதிய பீச்சர்போன்களுடன் இலவச வாய்ஸ் கால்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பீ்ச்சர்போன்களின் விலை ரூ.2000க்குள் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா நிறுவனத்துடனான இணைப்பிற்கு முன் வோடபோன் நிறுவனத்தின் 80 சதவிகித வருவாயினை வழங்கும் வாய்ஸ் கால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய ஒப்பந்தங்கள் உதவியாக இருக்கும் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வோடபோன் மற்றும் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

\"\"

லாவா மற்றும் இன்டெக்ஸ் நிறுவன பீச்சர்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்பிலான டாக்டைம் 18 மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த சலுகை லாவா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பத்து மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் லாவா மொபைல் போன்களை வாங்கும் போது அதிகபட்சம் ரூ.900 வரை கேஷ்பேக் பெற முடியும்.

புதிய மொபைல் போன்களை வாங்கி வோடபோன் சேவையில் புதிதாய் இணையும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே இந்த மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும், வோடபோன் சேவையில் புதிதாய் இணையும் அல்லது ஏற்கனவே வோடபோன் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் 45 கோடி பீச்சர்போன் வாடிக்கையாளர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 கோடி பேர் தங்களது சாதனங்களை மாற்றாமல் இருந்துள்ளனர் என ஹாங்காங்-ஐ சேர்ந்த கவுண்ட்டர்பாயிண்ட் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.  

\"\"

முன்னதாக வெளியான தகவல்களில் ஏர்டெல் நிறுவனமும் ஜியோபோன் போன்ற வசதிகள் நிறைந்த 4ஜி பீச்சர்போன் ஒன்றை வெளியிடலாம் என கூறப்பட்டது. ஜியோவுக்கு போட்டியாக வெளியிடப்படும் பட்சத்தில் புதிய ஏர்டெல் 4ஜி பீச்சர்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம்.

வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் பீச்சர்போன்களை தயாரிக்க ஏர்டெல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் அல்லது இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த பீச்சர்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.