ஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி

ஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி

ஹூவாய் இந்தியா மற்றும் ஒன்அசிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஹூவாய் மற்றும் ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்த விலையில் இன்சூரன்ஸ் வழங்குகிறது. புதிய திட்டத்தின் கீழ் ஹூவாய் மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ்-ஐ அமேசான் வலைத்தளத்தில் இருந்து பெற முடியும். ஹூவாய் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் விலை ரூ.1,249 முதல் துவங்குகிறது. இதற்கான வேலிடிட்டி திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டது முதல் ஒரு ஆண்டுக்கு வரை வழங்கப்படுகிறது. ஹூவாய் அறிவித்திருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஹூவாய் P20 ப்ரோ, ஹூவாய் P20 லைட் மற்றும் அனைத்து ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், ஹூவாய் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விபத்து அல்லது தண்ணீர் மூலமாக பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்து கொள்ள முடியும். இதுதவிர இலவச பிக்கப் மற்றும் டிராப் வசதி, 24X7 உதவி, கேஷ்லெஸ் க்ளெயிம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. ஹூவாய் இன்சூரன்ஸ் சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் இலவச பிக்கப் மற்றும் டிராப் சேவைகள் இந்தியா முழுக்க பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.