ஹூன்டாய் ஃபியூயல் செல் எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம்

ஹூன்டாய் ஃபியூயல் செல் எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம்

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கான்செப்ட் எஸ்யுவி நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூன்டாய் வரலாற்றில் முதல் முறையாக ஃபியூயல் செல் கான்செப்ட் வாகனத்திற்கான கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய எஸ்யுவி ஹைட்ரோஜன் மூலம் சக்தியூட்டப்படும் என்றும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
புதிய ஃபியூயல் செல் எஸ்யுவி இன்னும் பெயரிடப்படாமல் உள்ளது, எனினும் விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்குகிறது. லெக்சஸ் போன்று காட்சியளிக்கும் புதிய மாடலில் ஸ்கிம்டர் வடிவ ஹெட்லேம்ப் மற்றும் வி வடிவிலான கிரில் கொண்டுள்ளது. இதன் அலாய் வீல்கள் ஷர்கென் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஃபியூயல் செல் எஸ்யுவி ஹூன்டாய் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஹைட்ரஜன் ஃபியூயல் செல் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. 
 
\"\"
 
ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் ஃபியூயல் செல் வாகனம் 2013-ம் ஆண்டு தயாரித்தது. ஒரு முறை சார்ஜ் செய்து 800 கிலோமீட்டர் செல்லும் திறன் வழங்க ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யுவி 161 bhp செயல்திறன் கொண்டிருக்கும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. 
 
வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்ற சிறியதான இன்டீரியர் தோற்றத்தை கொண்டுள்ளது. வெள்ளை, சில்வர் மற்றும் கிரே நிறம் கொண்டுள்ள இன்டீரியர் மற்றும் ஆடியோ விஷுவல் ஸ்கிரீன் மற்றும் வைடு டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபின் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
 
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹூன்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கோனா எஸ்யுவி மாடலை வெளியிடும். இந்த மாடலில் 390 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் ஜெனிசிஸ் EV எனும் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத 31 மாடல்களை வெளியிட ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.