
ஹூவாய் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஹானர் 6சி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 6சி ப்ரோ ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த EMUI 5.1 வழங்கப்பட்டுள்ளது.
பிளாக், கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 6சி ப்ரோ EUR179 அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் 6சி ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் ஹானர் 9i ஸ்மார்ட்போன் பைபேக் கியாரண்டியில் வழங்கப்படுகிறது. இதனால் ஹானர் 9i வாங்குவோர் ஒரு ஆண்டு பயன்படுத்தியதும் எக்சேஞ்ச் செய்தால் 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.