ஹோன்டா ஜாஸ் வி பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா ஜாஸ் வி பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரிவிலிஜ் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரிவிலிஜ் எடிஷன் முந்தைய ஜாஸ் மாடல்களில் வழங்கப்படாத பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. வெளிப்புறங்களில் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பிரிவிலிஜ் எடிஷன் சின்னம் பொறுத்தப்பட்டுள்ளது.
 
வி கிரேடு சார்ந்த ஹோன்டா ஜாஸ் பிரிவிலிஜ் எடிஷன் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. சாதாரண வி கிரேடு ஜாஸ் மாடலை விட புதிய பிரிவிலிஜ் எடிஷன் விலை ரூ.5,000 வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஜாஸ் பிரிவிலிஜ் எடிஷன் விலை ரூ.7.36 லட்சம் முதல் துவங்குகிறது.
 
பிரிவிலிஜ் எடிஷன் ஹோன்டா ஜாஸ் 17.7 சென்டிமீட்டர் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெனஅட் சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 1.5 ஜிபி இன்டெர்னல் மெமரி, மிரர்லின்க் வசதி, வாய்ஸ் கமாண்ட், ப்ளூடூத், யுஎஸ்பி ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.   
 
\"\"
 
புதிய ஹோன்டா பிரிவிலிஜ் எடிஷன் இந்தியா முழுவதும் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு அடுத்த சில வாரங்களில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்ஜின் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸமிஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா ஜாஸ் வி பிரிவிலிஜ் எடிஷன் விலை ரூ.7.36 லட்சமும், பெட்ரோல் CVT மாடல் ரூ. 8.42 லட்சம், டீசல் மாடல் ரூ.8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
பண்டிகை காலத்தில் புதிய பிரிவிலிஜ் எடிஷன் முதல் கார் வாங்குவோரை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒன்றும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஹோன்டா ஜாஸ் பிரிவிலிஜ் எடிஷன் மாருதி பலேனோ மற்றும் ஹூன்டாய் i20 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.