ஹோன்டா லிவோ, டிரீம் யுகா மற்றும் சி.பி. ஷைன் மாடல்கள் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா லிவோ, டிரீம் யுகா மற்றும் சி.பி. ஷைன் மாடல்கள் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 லிவோ, டிரீம் யுகா மற்றும் சி.பி. ஷைன் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
 
2018 ஹோன்டா சி.வி. ஷைன் எஸ்.பி. புதிய வடிவமைப்பில் அசத்தல் தோற்றம் பெற்றிருக்கிறது. புதுவித டேன்க், ஸ்போர்ட் கிராஃபிக்ஸ், புதிய டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
 
புதிய சி.பி. ஷைன் மோட்டார்சைக்கிளில் 124.73 சிசி ஏர்-கூல்டு இன்ஜின் 10.16 பி.ஹெச்.பி. பவர், 10.30 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஷைன் டிரம், டிஸ்க் மற்றும் காம்பி பிரேக் சிஸ்டம் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
 
 
2018 ஹோன்டா லிவோ மாடலில் 109.19சிசி ஏர்-கூல்டு இன்ஜின், 8.31 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 2018 லிவோ மாடலும் ஐந்து நிறங்களில் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 
 
ஹோன்டா டிரீம் யுகா 2018 மாடலில் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், HET லோ ரோலிங் ரெசிஸ்டண்ட் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து நிறங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள் கூடுதலாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 டிரீம் யுகா மோட்டார்சைக்கிளில் 110 சிசி ஏர்-கூல்டு இன்ஜின், 8.25 பி.ஹெச்.பி. பவர், 8.63 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
 

 

2018 ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. விலை ரூ.62,032, 2018 ஹோன்டா லிவோ மாடல் ரூ.56,230 மற்றும் 2018 ஹோன்டா டிரீம் யுகா ரூ.52,741 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.