512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஹுவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஹுவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் போர்ஷ் டிசைன் மேட் ஆர்எஸ் ஸ்மார்ட்போனினை ஹூவாய் அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் போர்ஷ் வடிவமைப்பு வேரியண்ட் அறிமுகம் செய்து வரும் ஹூவாய் இம்முறையும் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்துள்ளது. 
 
புதிய போர்ஷ் டிசைன் மேட் ஆர் எஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் OLED ஃபுல் வியூ டிஸ்ப்ளே, கிரின் 970 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.
 
ஹூவாய் போர்ஷ் டிசைன் மேட் ஆர்எஸ் ஸ்மார்ட்போனின் மூன்று கேமரா லெய்கா லென்ஸ் செட்டப் வழங்கப்படுகிறது. இவற்றில் 40 எம்பி RGB சென்சார், f/1.8 அப்ரேச்சர், 20 எம்பி மோனோக்ரோம் சென்சார், f/1.6 அப்ரேச்சர், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.
 
 
 
ஹூவாய் போர்ஷ் டிசைன் மேட் ஆர்எஸ் சிறப்பம்சங்கள்:
 
 
- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் 18:9 OLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 சிப்செட்
- மாலி-G72 MP12 GPU, NPU
- 6 ஜிபி ரேம் 
- 256 ஜிபி /512 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி மூன்று கேமரா செட்டப்
- 24 எம்பி செல்ஃபி கேமரா, 3D போர்டிரெயிட் லைட்டிங்
- இன்-டிஸ்ப்ளே + பின்புற கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
- Qi வயர்லெஸ் சார்ஜிங்
 

 

ஹூவாய் போர்ஷ் டிசைன் மேட் ஆர்எஸ் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறoது. இதன் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 1695 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,36,270), 6 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை 2095 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,68,590) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.