60 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்: உடனே பெறுவது எப்படி?

60 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்: உடனே பெறுவது எப்படி?

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் சலுகை என்ற பெயரில் மாதம் 10 ஜிபி டேட்டா என மூன்று மாதங்களுக்கு இலவசமாக 30 ஜிபி டேட்டாவினை பாரதி ஏர்டெல் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட இலவச டேட்டா ஏப்ரல் மாத வாக்கில் நீட்டிக்கப்பட்டது. பின் ஜூன் மாத வாக்கில் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

மூன்று மாத காலம் நிறைவுற்ற நிலையில், கூடுதல் டேட்டா மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பின் படி மை ஏர்டெல் செயலியில் வாடிக்கையாளர்கள் பெறும் டேட்டா மார்ச் 2018 வரை வழங்கப்படுகிறது.

\"\"

இலவச டேட்டாவினை பெற என்ன செய்ய வேண்டும்?

- ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் மை ஏர்டெல் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

- அடுத்து உங்களது போஸ்ட்பெயிட் மொபைல் நம்பரை பதிவு செய்து, OTP மூலம் உறுதி செய்ய வேண்டும்

- ஏர்டெல் ஹோம் பக்கத்தில் தெரியும் (Enjoy Live Shows With FREE DATA) விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்

- ஏர்டெல் டிவி செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

- அடுத்து 4ஜி / 3ஜி டேட்டா உங்களது கணக்கில் 24 மணி நேரத்தில் சேர்க்கப்பட்டு விடும் 

பாரதி ஏர்டெல் சமீபத்திய அறிவிப்பில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத மாத டேட்டாவினை அடுத்த மாதத்திலும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தது. இதனால் பயன்படுத்தாத டேட்டா வீணாகமால் வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.