Food: சுவையான.. ருசியான.. சால்சா உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

8 months ago 210

சால்சா உருளைக்கிழங்கு போன்ற எளிதான உணவுகளுக்கான சமையல் குறிப்புகள் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது

 சுவையான.. ருசியான.. சால்சா உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

சால்சா உருளைக்கிழங்கு ( Image Source : Twitter/@read4funDOTin )

உருளைக்கிழங்கு இருந்தால் ஊருக்கே வகை வகையாய் சமைக்கலாம் என்பார்கள். அப்படி சமையலில் ஆல் இன் ஆல் அழகு ராஜா உருளைக்கிழங்கு. இதில் வகை,வகையான பதார்த்தங்கள் செய்ய முடியும். அதில் ஒன்று  சால்சா செய்வது.

சால்சா உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாகும். மக்களின் பிஸியான வாழ்க்கைக்கு நடுவே சுவையான உணவைத் தயார் செய்து சாப்பிட இது சிறந்த தேர்வாக இருக்கிறது. சால்சா உருளைக்கிழங்கு போன்ற எளிதான உணவுகளுக்கான சமையல் குறிப்புகள் மக்களுக்குத் தேவைப்படுவதற்கு இதுவே காரணம்.

உருளைக்கிழங்கை வறுப்பது அல்லது பொரிப்பது மற்றும் மற்ற எல்லாப் பொருட்களுடன் சேர்ப்பது கடினமான காரியம் அல்ல. ஆனால், உருளைக்கிழங்கையே தனி ரெசிப்பியாகச் செய்வது சுவாரசியமான சமையலாகிறது. அந்த வகையில் சால்சா உருளைக்கான ரெசிபி...

தேவையான பொருட்கள்:

3 உருளைக்கிழங்கு

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1 தேக்கரண்டி கருப்பு மிளகு

1 தேக்கரண்டி தனியாத் தூள்

தேவையான அளவு உப்பு

1 வெங்காயம்

1 தக்காளி

1 டீஸ்பூன் எலுமிச்சை

உருளைக்கிழங்கு சால்சாவை உருவாக்க, முதல் படியாக உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, துண்டுகளை 150 டிகிரி செல்சியஸில் 5 நிமிடங்களுக்கு சூடாக்கவும். பிறகு, உருளைக்கிழங்கை அடுப்பில் வைத்து, மிருதுவாகும் வரை சுடவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் ஊற்றலாம் அல்லது சுடலாம், இரண்டுமே உருளைக்கிழங்கை மிருதுவாகச் செய்வதற்கான வழிகள்.

இதற்கிடையில், ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து உப்பு, கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கு சுடப்பட்டதும் அல்லது பொரிந்ததும், அவற்றை எடுத்து, மசாலா கலவையுடன் கலந்து, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தைச் சேர்க்கவும். சல்சா உருளைக்கிழங்கு உணவு பரிமாறத் தயாராக உள்ளது. 

Published at : 02 Jan 2023 08:59 PM (IST) Tags: Potato easy recipes salsa snacks for kids snacks recipes recipes for kids