- முகப்பு
- புகைப்படங்கள்  / லைப்ஸ்டைல்
- Oats pakkoda recipe: சத்து இருக்கா இருக்கு..டேஸ்ட் இருக்கா இருக்கு.. குளு குளு க்ளைமேட்டிற்கு காரசாரமான ஓட்ஸ் பக்கோடா!
By : சுபா துரை | Updated: 22 Jun 2023 06:29 PM (IST)
சத்து இருக்கா இருக்கு..டேஸ்ட் இருக்கா இருக்கு.. குளு குளு க்ளைமேட்டிற்கு காரசாரமான ஓட்ஸ் பக்கோடா செய்து பாருங்க.
மழை நேரம் என்றாலே அனைவரும் தேடுவது காரசாரமான நொறுக்கு தீனிகளை தான். அவ்வாறு சாப்பிடும் நொறுக்கு தீனி சத்தாகவும் இருந்தால் டபுல் சந்தோசம் தானே..! இதோ இந்த ஓட்ஸ் பக்கோடா ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்:இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப், வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை நறுக்கியது, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் பொரிப்பதற்கு.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஓரமாக வைத்து விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணையை சூடு செய்து, பக்கோடா சிறு உருண்டையாக தட்டி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் பக்கோடா தயார்.
Tags: tamil cooking tamil recipes oats pakkoda pakkoda recipe
உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.