Vastu Tips: 2023ல் வீட்டில் நலம், வளம், மகிழ்ச்சி சூழ வேண்டுமா..? வாஸ்து சொல்வது என்ன..?

8 months ago 216

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும், நன்மையும், ஆரோக்கியமும், செல்வமும் நிறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

 2023ல் வீட்டில் நலம், வளம், மகிழ்ச்சி சூழ வேண்டுமா..? வாஸ்து சொல்வது என்ன..?

வாஸ்து டிப்ஸ்

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும், நன்மையும், ஆரோக்கியமும், செல்வமும் நிறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

வாஸ்து சாஸ்திரம்:

வாஸ்து சாஸ்திரம் என்பது பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை அறிவியல் ஆகும். வடிவமைப்பு, அளவீடுகள், தளவமைப்புகள் மற்றும் விண்வெளி ஏற்பாடுகள் ஆகியவற்றின் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் அழைக்கப்படலாம். வாஸ்து சாஸ்திரத்தை ஆன்மீகம் மற்றும் அறிவியலின் சாரத்தின் இணக்கமான கலவை என்றும் கூறலாம்.

இந்த வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும், நன்மையும், ஆரோக்கியமும், செல்வமும் நிறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

news reels

நேர்மறை எண்ணம்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் நேர்மறை சக்தியை நிரப்பலாம். எப்படி எனக் கேட்கிறீர்களா? வீட்டின் நுழைவுவாயில் மிகவும் முக்கியம். ஆகையால், நீங்கள் வீடு வாங்கினாலோ? அல்லது வாடகைக்கு அமர்ந்தாலோ? அந்த வீட்டின் வாயில் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி இருப்பதை உறுதி செய்யுங்கள். இது வீட்டினுள் நேர்மறையான சக்தியை வசப்படுத்திக் கொண்டு வரும்.

செல்வம் செழிக்க

உங்களுக்கு வளமும் செல்வமும் சேர வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் உள்ள பீரோவை தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும். உங்கள் பீரோவை திறக்கும் போது அது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

மகிழ்ச்சி தங்க

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்க ஒரு மீன் தொட்டி வைக்கலாம். அதில் தண்ணீர் விழும் சத்தம் வெளியில் கேட்கும்படி அமைக்கலாம். இது வீட்டிற்கு ஒரு நேர்மறை சக்தியை தருவதோடு வீட்டினில் வளம் சேர்க்கும். அதுதவிர வீட்டில் சில நேர்மறை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கலாம். இவற்றை வீட்டின் வடகிழக்கு திசை நோக்கி வைக்கலாம்.

தொழில் வளம் சிறக்க

வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்கள் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருக்க உங்கள் வீட்டில் ஒரு புல்லாங்குழல் வைத்திருங்கள். அதேபோல் கல்வி தடைகள் நீங்க வீட்டில் இரண்டு புல்லாங்குழல்களை தொங்கவிடலாம்.

உடல் ஆரோக்கியம் மேம்பட

உங்களின் உடல் நலனையும் உங்கள் குடும்பத்தினரின் உடல் நலனையும் பேணுவது மிகவும் அவசியம். அதனால் தூங்கும் போது உங்கள் தலையை தெற்கு நோக்கி வைத்துறங்கவும். படுக்கைக்கு நேராக கண்ணாடி வைக்காதீர்கள். அது நோயை வரவேற்கும். உடல் நலன் சரியில்லாதவர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் உறங்கும் அறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வையுங்கள். அது அவர்கள் சீக்கிரம் நலன் பெறுவதற்கான நேர்மறை சக்தியை ஈர்த்து வரும்.

Published at : 02 Jan 2023 09:39 PM (IST) Tags: Health Joy positivity wealth Vastu Tips New Year