WhatsApp: ''அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்'' - விரைவில் வருகிறது வாட்ஸ் அப் அப்டேட்!

1 year ago 178

தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப்

By: முருகதாஸ் | Updated at : 20 Sep 2022 04:52 PM (IST)

 ''அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்'' -  விரைவில் வருகிறது வாட்ஸ் அப் அப்டேட்!

வாட்ஸ் அப்

பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். 

அந்த வகையில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது நீங்கள் யாருக்கேனும் மெசேஜை அனுப்பிவிட்டால் அது தவறாகும் பட்சத்தில் டெலிட் செய்யலாம். அதனை எடிட் செய்ய முடியாது. அந்த வசதியைத்தான் தற்போது சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். இந்த வசதி அறிமுகமானால் மற்றவருக்கு மெசேஜை அனுப்பிய பிறகுகூட அதனை எடிட் செய்ய முடியும். இப்போது இந்த வசதியை வாட்ஸ் அப் சோதனைமட்டுமே செய்து வருகிறது. இது வெற்றியடைந்தால் பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகும்.


அதேபோல், வாட்ஸ் அப் குரூப்பில் போல் (poll) ஆப்ஷனை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். அதற்கான முதற்கட்ட வேலைகளில் அந்நிறுவனம் இறங்கிவிட்டது. குரூப்பில் உள்ள பயனர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு போல ஓட்டு போடும் முறையிலான poll ஐ உருவாக்கலாம்.டெலக்ராமில் இந்த வசதி தற்போது இருக்கும் நிலையில் அதேபோன்ற வசதியை வாட்சப்பிலும் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது வாட்சப் நிறுவனம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதில் தாங்கள் எதற்கு வாக்களிகக் வேண்டுமோ அதற்கு வாக்களிக்கலாம். எந்த ஆப்சனுக்கு எவ்வளவு வாக்குகள் என்ற விவரங்கள் அதில் தெரியவரும். ஆனால் யார் எந்த ஆப்சனுக்கு வாக்களித்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாது. மற்ற மெசேஜ்களைப் போலவே இதுவும் எண்ட் டூ எண்ட் முறையில் இருக்கும். 

Past group participants: 

இதுவரை வாட்ஸ் அப் குரூபில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று காண முடியும். இந்நிலையில், விரைவில், வாட்ஸ் அப் குழுவிலிருந்து யாராவது விலகி இருந்தார் அவர்கள் பற்றிய தகவலை 60 நாட்களுக்கு பெறும் வகையில் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ் அப் குழுவில் இருந்து யாரெல்லாம் லெஃப்ட் ஆகியிருந்தால் அவர்களை கண்டுகொள்ள முடியும்.

Published at : 20 Sep 2022 04:52 PM (IST) Tags: WhatsApp update WhatsApp WhatsApp edit option