ஃபிலிப் போன்

நன்றி குங்குமம் முத்தாரம் கடந்த சில வருடங்களில் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தைச் செலுத்திய எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எதுவென்று கேட்டால் ‘ஸ்மார்ட்போன்’ என்று பதில் வரும். அதே நேரத்தில் விற்பனையை அதிகரிக்க ஸ்மார்ட்போனில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன.டிஸ்பிளேயின்...

ஃபிலிப் போன்

நன்றி குங்குமம் முத்தாரம் கடந்த சில வருடங்களில் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தைச் செலுத்திய எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எதுவென்று கேட்டால் ‘ஸ்மார்ட்போன்’ என்று பதில் வரும். அதே நேரத்தில் விற்பனையை அதிகரிக்க ஸ்மார்ட்போனில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன.டிஸ்பிளேயின் அளவு மற்றும் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரியின் திறன், ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களின் அளவு, இயங்குதளம், டிசைன், மென்பொருள், வேகத்திறன், எடை, விலை என அனைத்து விதங்களிலும் மாற்றங்களை நிகழ்த்தி யிருக்கின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். இனி ஸ்மார்ட்போனில் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இருந்தாலும் புதிதாக ஏதாவது செய்தால் மட்டுமே சந்தையில் நிலைத்து இருக்க முடியும் என்று சில நிறு வனங்கள் நினைக்கின்றன. நினைப்பதோடு புதிய மாடலையும் சந்தையில் அறிமுகம் செய்கின்றன.அந்த மாடல் இதற்கு முன் வெளியான மாடல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. அப்படியான ஒரு மாடல்தான் ‘சாம்சங்’ நிறுவனத்தின் ‘கேலக்ஸி இஸட் ஃபிலிப்’. இதற்கு முந்தைய மாடலான ‘கேலக்ஸி ஃபோல்டு’ போல இதையும் மடக்கி வைத்துக்கொள்ள முடியும் என்பது சிறப்பு. பிப்ரவரி 14-ம் தேதி அமெரிக்காவில் வெளியான இந்தப் போனுக்கு ரொம்பவே மவுசு. 6.70 இன்ச்சில் டிஸ்பிளே, 1080x2636 பிக்ஸல் ரெசல்யூசன், 10 எம்பியில் செல்ஃபி கேமரா, 12 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரேம் ஸ்டோரேஜ், 3300mAh பேட்டரி திறன் என்று அசத்து கிறது இந்த போன். இதன் விலை ரூ.98,400