அசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், இம்முறை பெட்ரோல் ஸ்கூட்டராக அல்லாமல் மின்சார ரகத்தில் அது அறிமுகம் செய்யப்பட்டது.பஜாஜ் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை...

அசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், இம்முறை பெட்ரோல் ஸ்கூட்டராக அல்லாமல் மின்சார ரகத்தில் அது அறிமுகம் செய்யப்பட்டது.பஜாஜ் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. புனே மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. இதை, இதர நகரங்களுக்கும் விரிவுபடுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்விரு வேரியண்ட் மின்சார ஸ்கூட்டர்களும் தற்போது கேடிஎம் டீலர்ஷிப் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் தோற்றம் வெஸ்பாவை போன்று கிளாசியானதாக உள்ளது. தொடர்ந்து, நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றையும் கூடவே உள்ளடக்கி இருக்கிறது.அந்த வகையில், கிளவுட்டை சார்ந்த அம்சங்கள், ஆன்போர்டு டயக்னாஸ்டிக், ஸ்மார்ட்போன் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குதிரை லாடம் வடிவிலான ஹெட்லேம்ப் எல்இடி வளைவு, தொடுதிறன் கொண்ட ஸ்விட்ச் கியர் மற்றும் பல ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர, பேட்டரி மேலாண்மை அமைப்பு, நவீன பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் இரு சவாரி மோட்கள் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் ஐபி67 தரம் வாய்ந்த லித்தியம் அயன்பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது, 4kW திறன்கொண்ட மின்மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இந்த மின்சார இன்ஜின் அதிகபட்சமாக 16 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது, ஈகோ மோடில் 95 கி.மீ. ரேஞ்சையும், ஸ்போர்ட் மோடில் 85 கி.மீ. ரேஞ்சையும் வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதுவே, 25 சதவீதத்தை மட்டும் பெற 60 நிமிடங்கள் போதுமானது. இந்த சிறப்பு வாய்ந்த மின்சார ஸ்கூட்டரின் வருகையை இந்தியாவின் அனைத்து மாநில வாடிக்கையாளர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக, சென்னை போன்ற முக்கியமான பெருநகர வாசிகள் மத்தியில் இந்த ஸ்கூட்டர் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.