அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா இல்லை

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் ஜம்முவில்...

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா இல்லை
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் ஜம்முவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3003 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் 2694 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது இதனிடையே சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதே போல்,‌ ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவரின் மனைவிக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.