இருசக்கர வாகன எஞ்ஜினை பயன்படுத்தி ரோப் வாகனம் உருவாக்கிய பொறியாளர்

மலைவாழ் மக்களுக்கு உதவும், ரோப் வாகனத்தை மதுரை பொறியாளர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஐயர் பங்களா நாகனாகுளத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். 50 வயதாகும் பொறியியல் பட்டதாரியான இவர் மலைவாழ் மக்கள் பல அடி நூறு பள்ளத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள்,...

இருசக்கர வாகன எஞ்ஜினை பயன்படுத்தி ரோப் வாகனம் உருவாக்கிய பொறியாளர்

மலைவாழ் மக்களுக்கு உதவும், ரோப் வாகனத்தை மதுரை பொறியாளர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஐயர் பங்களா நாகனாகுளத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். 50 வயதாகும் பொறியியல் பட்டதாரியான இவர் மலைவாழ் மக்கள் பல அடி நூறு பள்ளத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற விளைப்பொருட்களை எளிதாக மேலே கொண்டு வரும் வகையில் இருசக்கர வாகன இன்ஜின், இரும்பு கம்பியால் ஆன ரோப் இவற்றை கொண்டு ரோப் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.இதன்மூலம் 250 கிலோ வரை எடையுள்ள பொருட்களை 2 ஆயிரம் அடி உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று இஸ்மாயில் கூறினார். கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் படும் இன்னலைப்பார்த்து, இதனை உருவாக்கியதாகவும், சுனாமி, கனமழை, பெருவெள்ளம், உள்ளிட்ட ஆபத்து  காலங்களில் பேரிடர் மீட்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்மாயில் கூறினார்.