இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?

பெங்களூருவில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனமான URSC-இல், டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
பெங்களூருவில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனமான URSC-இல், டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள் & காலியிடங்கள்: 1. டெக்னீசியன் ‘B’ - 1022. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் - 41உள்ளிட்ட பல்வேறு பணிகள் மொத்தம் = 182 காலிப்பணியிடங்கள் இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா? முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 15.02.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2020தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 07.03.2020 வயது வரம்பு: (06.03.2020 அன்றுக்குள்), குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். குறிப்பு:பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. தேர்வுக்கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் (ஆண்கள்) - ரூ.250 பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. குறிப்பு:ஆன்லைன், ஆஃப்லைன் வழியாகவும் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். இதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..! ஊதியம்: குறைந்தபட்சமாக, ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். குறிப்பு:பணிகளுக்கேற்ப ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு. கல்வித்தகுதி:குறைந்தபட்சமாக, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். அதிகபட்சமாக டிப்ளமோ இன் இன்ஜினியரிங் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆட்டொ மொபைல், எலக்ட்ரிக்கல்) அல்லது அதற்கிணையான இளங்கலை பட்டப்படிப்பில் (B.Sc) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு:பணிகளுக்கேற்ப கல்வித் தகுதியில் மாற்றங்கள் உண்டு. இதையும் படிக்க: CMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா ? விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், www.isro.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். தேர்வு செய்யப்படும் முறை:1. எழுத்துத்தேர்வு (Written Test)2. திறன் தேர்வு (Skill Test) மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://apps.isac.gov.in/TA-2020/advt.jsp - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதையும் படிக்க: தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?