ஈரோடு : புத்தக திருவிழா ரத்து

(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகவும்...

ஈரோடு : புத்தக திருவிழா ரத்து
(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகவும் சென்னை, மும்பை, டெல்லி, போன்ற பெரு நகரங்களிலிருந்து வரவேண்டிய மிகமுக்கியப் புத்தக நிறுவனங்கள் வரமுடியாத சூழலைக் கணக்கிலெடுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடப்பட்டுள்ள தொடர் விடுமுறையைக் கணக்கிலெடுத்தும், லட்சக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடுவது இண்றைய சூழலுக்கு ஏற்றதல்ல என்ற காரணத்தை முன்னிட்டும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறுவதாக இருந்த 2020ஆம் ஆண்டிற்கான புத்தக திருவிழா ரத்து செய்யப்படுகிறது. 16வது ஈரோடு புத்தகத் திருவிழாவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக நடத்த பேரவை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை திருவிழாவை தினசரி மாலை 6 மணிக்கு இணைய வழியாக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் நேரலையாக ஒளிபரப்ப பேரவை திட்டமிட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.