“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..!

  உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு சில கோயில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அதனால்,...

“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..!
  உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு சில கோயில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அதனால், சளி, இருமல், காய்ச்சல் பாதிப்போடு இருப்பவர்கள் கோயிலுக்கு வ‌ரவேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உடல்நலம் பாதிப்போடு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் 28 நாட்களுக்கு கோயில் வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. .டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் ஆன போலீஸ்: குவியும் பட வாய்ப்புகள்..! டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணை முதல்வர் தகவல் கேரளாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதையடுத்து ‌இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா அறிகுறியோடு இருப்பவர்கள் திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலுக்கும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.