உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்

நன்றி குங்குமம் முத்தாரம் மனிதர்களின் தொழில்நுட்பத் திறமைக்கு அகப்படாமல்  வெகுதொலைவில் இருக்கும் நட்சத்திரங்களையும், கோள்களையும், வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையையும் பற்றி பூமியில் இருந்தவாறே அறிந்துகொள்வதற்கு உலகின் மிகப்பெரிய ரேடியோ...

உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்

நன்றி குங்குமம் முத்தாரம் மனிதர்களின் தொழில்நுட்பத் திறமைக்கு அகப்படாமல்  வெகுதொலைவில் இருக்கும் நட்சத்திரங்களையும், கோள்களையும், வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையையும் பற்றி பூமியில் இருந்தவாறே அறிந்துகொள்வதற்கு உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை சீனா கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் புயர்டோ ரிகோவில் உள்ள ஆர்சிபோ ரேடியோ கண்காணிப்பு டவர் தான் உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்பாக இருந்தது. இதனை முறியடித்தது மட்டுமல்லாமல், ஆர்சிபோவை விட 195 மீட்டர் பெரியதாகவும், 2.5 பங்கு அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கிறது சீனாவின் ரேடியோ டெலஸ்கோப். 4450 பலகைகளை இணைந்து ரேடியோ டிஷ்ஷாக உருவாகியுள்ளனர்.ஒரு வினாடிக்கு 38 GB அளவுக்குத் தகவல்களைச் சேகரிக்கும் திறன் வாய்ந்தது இந்த ரேடியோ டெலஸ்கோப். இதன் உட்பகுதி மட்டுமே 30 கால்பந்து மைதானங்களை இணைத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெரியது. தவிர, ஊடுருவிச்செல்லும் துளைகளை 500 மீட்டருக்கு கொண்டது.இதனை கட்டமைக்க  5 வருடங்களாகின. பிறகு சோதித்து, நிரந்தரமாக செயல்பட வைக்க 3 வருடங்கள் எடுத்துக்கொண்டனர். செலவு மட்டுமே 170 பில்லியன் டாலர். இதனை  சுருக்கமாக `Fast’ என அழைக்கின்றனர்.  மிகக் குறைந்த புவியீர்ப்பு செயல்பாடுகளைக்கூட துல்லியமாய் இதனால் கண்காணிக்க இயலும். மட்டுமல்ல, பெரிய அளவில் ஹைட்ரஜன் பற்றி சர்வே செய்ய உள்ளது.  வானத்தை இருமுறை முழு சர்வே செய்யும்.  விண்மீன் சார்ந்த தகவல் பரிமாற்றங்களை துல்லியமாக கண்காணித்து வெளிப்படுத்தும். மொத்தத்தில் இந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம், வேறு உலகங்களில் நடமாட்டம் உள்ளதா... தொடர்புகள் உள்ளதா என்பதை மேலும் துல்லியமாய் அறிந்துகொள்ள இயலும்.தொகுப்பு: ராஜிராதா