ஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீசார் அடித்து துன்புறுத்தியதாக செல்பி வீடியோ எடுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மண்டபல்லி மண்டலம், புட்லசேருவு கிராமத்தை...

ஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீசார் அடித்து துன்புறுத்தியதாக செல்பி வீடியோ எடுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மண்டபல்லி மண்டலம், புட்லசேருவு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ்(21). இவர், சித்தூர் மாவட்டம் நகரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வேலை இல்லாமல் சாப்பிட போதிய உணவு கிடைக்காததால் சீனிவாச ராவ் கடந்த மாதம் 31ம் தேதி தனது பைக்கில் நகரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். குண்டூர்- பிரகாசம் மாவட்ட எல்லையில் கடந்த 2ம் தேதி பிற்பகல் ஸ்டூவர்டுபுரம் சோதனைச் சாவடியில் ஊரடங்கு உத்தரவு மீறி வெளியே வந்ததாக கூறி சீனிவாச ராவை வெதுலபல்லி  போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அன்று இரவு  போலீசார் பைக்கை வழங்காமல் சீனிவாச ராவை விடுவித்தனர். காவல் நிலையத்தில் இருந்து வந்த சீனிவாச ராவ் நேற்றுமுன்தினம் காலை குண்டூர் மாவட்டம், பாபட்லா நகர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாபட்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  சீனிவாச ராவ் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில்  செல்பி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதில் அவர், போலீசார் தனது பைக்கை பறிமுதல் செய்து, மீண்டும் ஒப்படைக்காமல், அவதூறாக பேசி தகாத முறையில்  நடந்து கொண்டதாகவும், தனது தற்கொலைக்கு வெதுலபல்லி போலீசாரே காரணம் எனவும் கூறியுள்ளார்.இது பற்றி மாநில டிஜிபி கவுதம் சவாங் கூறுகையில், ‘‘வாலிபர் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். போலீசார் காரணம் என்பது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.