எந்தெந்த நாட்டில் எத்தனை பேர்? - கொரோனாவுக்காக ஒரு வெப்சைட்..!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 77 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில்...

எந்தெந்த நாட்டில் எத்தனை பேர்? - கொரோனாவுக்காக ஒரு வெப்சைட்..!
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 77 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் 80,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது கொரோனா. இத்தாலியில், நேற்று ஒரு நாளில் மட்டும் 3,590 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மொத்தமாக 24,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 7,845 பேரும், ஜெர்மனியில் 5,813 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்த தகவல்களை உலக அளவில் தெரிந்துகொள்ள கூகுள் பிரத்யேக இணையப்பக்கம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு https://www.bing.com/covid என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உயிரிழப்பு எத்தனை உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் நாடுகள் வாரியாகவும் எண்ணிக்கை விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக முதியவரின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு