எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (BSF)-இல், குரூப்-பி, குரூப்-சி பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் - க்ரூவ் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள்...

எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (BSF)-இல், குரூப்-பி, குரூப்-சி பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் - க்ரூவ் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பணிகள்:1. சப்-இன்ஸ்பெக்டர் (SI - Master, Engine Driver, Workshop)2. தலைமைக் காவலர் (Head Constable - Master, Engine Driver, Workshop)3. கான்ஸ்டபிள் - க்ரூவ் (Constable - Crew) இதையும் படிக்க: இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்! காலிப்பணியிடங்கள்:1. சப்-இன்ஸ்பெக்டர் (SI) - 172. தலைமைக் காவலர் (Head Constable) - 1403. கான்ஸ்டபிள் - க்ரூவ் (Constable - Crew) - 160 மொத்தம் = 317 காலிப்பணியிடங்கள் முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.03.2020 வயது வரம்பு:குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு:பணிகளுக்கேற்ப வயது வரம்பு மாற்றங்கள் உண்டு. இதையும் படிக்க: இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா? கல்வித்தகுதி: 1. சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கு, குறைந்தபட்சமாக 10+2 வகுப்பில் தேர்ச்சியும், அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் (பி.இ / டிப்ளமோ - மெக்கானிக்கல், மெரைன் இன்ஜினியரிங்) தேர்ச்சி, அத்துடன் பணிக்கேற்ப சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அவசியம் 2. தலைமைக் காவலர் (Head Constable - RM) என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி அத்துடன் பணி சார்ந்த ஐடிஐ டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அவசியம். 3. கான்ஸ்டபிள் - க்ரூவ் என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி அத்துடன் நீச்சல் தெரிந்தவராக இருத்தல் அவசியம். கூடுதலாக படகு (Below 265 HP) ஓட்டத் தெரிந்தவராகவும், அதில் ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். இதையும் படிக்க: தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா? விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், http://www.bsf.nic.in/en/recruitment.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம். குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி: தேர்வுக்கட்டணம்:1. எஸ்.ஐ பணிக்கான விண்ணப்பக்கட்டணம் - ரூ.1002. தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பக்கட்டணம் - ரூ.200 இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா? தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்டங்களாக இந்த பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்படுவர். 1. முதற்கட்ட எழுத்து தேர்வு2. இரண்டாம் கட்டத்தில் PST, PET & மருத்துவ தகுதி தேர்வு ஊதியம்:குறைந்தபட்சமாக, ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். குறிப்பு:பணிகளுக்கேற்ப மாத சம்பளத்தில் மாற்றங்கள் உண்டு. மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, http://www.bsf.nic.in/doc/recruitment/r0118.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.