ஓடும் காரில் தீப்பிடித்து விபத்து: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ பிடித்ததால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. கோவையை சேர்ந்தவர் ஜகான். இவர் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அவரது நண்பர் பிரகாஷ் உடன் கோபிசெட்டிபாளையம்...

ஓடும் காரில் தீப்பிடித்து விபத்து: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ பிடித்ததால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. கோவையை சேர்ந்தவர் ஜகான். இவர் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அவரது நண்பர் பிரகாஷ் உடன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மோகனசுந்தரம் என்பவரை காண காரில் சென்றுள்ளார். கார் கோவை கரட்டூர் அருகே செல்லும்போது பழுது ஏற்பட்டு நின்றுள்ளது. இதனையடுத்து பழுதான காரை சரி செய்வதற்காக காரை வேகமாக இயக்கிய நிலையில், காரின் முன்பாகத்தை திறந்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பகுதி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தீயானது டயர் மற்றும் இருக்கைகளுக்கு பரவி கார் முழுவதும் எரிய தொடங்கியுள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் பணிநீக்கம் கொரோனா கண்காணிப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கிய நபர்.. உதவிய 40 பேருக்கு பாதிப்பு? இதில் காரின் முன் நின்று கொண்டிருந்த ஜகான் மற்றும் பிரகாஷ்க்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனையடுத்து பிரகாஷூம், ஜகானும் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.