குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது 'பறக்கும் செல்போன் டவர்கள்'...

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த...

குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது 'பறக்கும் செல்போன் டவர்கள்'...

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற்றளவில் இணைய இணைப்பு வழங்கப்படும். இரு ஆண்டுகளுக்கு முன் கென்யாவின் சில பகுதிகளில் இணையத்தை அடைய இது பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில், பறக்கும் மொபைல் கோபுரங்களைப் பயன்படுத்தி இணைய சேவையை வழங்க 2017 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, Telelift என்ற பெயரில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.பறக்கும் செல்போன் டவர்:Telelift என்பது பறக்கும் செல்போன் டவரை உருவாக்கும் முயற்சி ஆகும். இதற்காக டைனிங் டேபிள் அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை நீண்ட கம்பி மூலம் தரையில் இணைக்கப்படும். குறைந்தது ஒரு மாதமாவது Telelift காற்றில் பறக்க முடியும் என அதனை தயாரித்து வரும் நிறுவனம் கூறியுள்ளது.ட்ரோன் கான்சப்ட்..கடந்த 2017-ம் ஆண்டில் இண்டியானாவில் உள்ள பர்டியூ(Purdue) பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த ராகுல் திவாரி என்பவர் இந்த கான்செப்டை முதலில் தெரிவித்துள்ளார். மைக்ரோவேவ் போன்ற அளவிலான சக்தியைப் பயன்படுத்தி, சோலார் பேனல்கள் அல்லது வேறு மின்சார சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அவரது ட்ரோன்கள் 200 அடியில் பறக்கின்றன. திவாரி துவக்கத்தில் தனது ட்ரோன்களை ஆப்பிரிக்காவில் பறக்கும் காவல் கோபுரங்களாக பயன்படுத்த விரும்பினார். பின்னர் தொழித்துறையினருடன் பேசிய பிறகு அந்த எண்ணத்தை மாற்றி கொண்டுள்ளார். தற்போது திவாரி கண்டறிந்த தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் ட்ரோன்கள் நீண்ட காலத்திற்கு பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் 4ஜி ரவுட்டர்களை இணைத்தால், எங்கு வேண்டுமானாலும் இணைய வசதியை அளிக்க முடியும்.20 மைல் முதல் 30 மைல்...மொபைல் கவரேஜ் கணிசமாக குறையும் பகுதிகளில் நிறுவப்படும் ஒரு ட்ரோன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு இனைய சேவையை தங்கு தடையின்றி வழங்க முடியும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ட்ரோனும் 20 மைல் முதல் 30 மைல் வரையிலான சுற்றளவில் பல நூறு பேருக்கு உயர்தர இணையத்தை வழங்க முடியும். இதன்படி எனவே தொலைதூர பகுதிகளுக்கு ஒரு ட்ரோன் மட்டுமே தேவைப்படலாம். அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகளுக்கு பல ட்ரோன்கள் தேவைப்படலாம்.கம்பி அறுந்தாலும்..இந்த Telelift ட்ரோன்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முழுவதும் ஆட்டோமேட் செய்யப்பட்டிருக்கும் இந்த வகை ட்ரோன்களை புறப்பட செய்யவும், தரையிறக்கவும் ஒரு பைலட்தேவை. Telelift பேக்-அப் பேட்டரி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே தரையுடன் இணைக்கப்படும் கம்பி அறுபட்டாலும், அது உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவசர கால தேடல் மற்றும் மீட்புக்கு Telelift ஒரு சிறந்த தயாரிப்பகை இருக்கும். ஆனால் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வெப்பத்தை தானாக Telelift ட்ரோன்களுக்கு மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தேவை என்ற கருத்து நிலவுகிறது. இணைய தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் Telelift ட்ரோன்கள் தரையிறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.