கொசுவத்தி நெருப்பால் பிரிட்ஜ் வெடித்து விபத்து: முதியவர் உயிரிழப்பு

திருவாரூரில் பிரிட்ஜ் வெடித்து முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. வயது 82. இவருக்கு நவநீதம் என்ற மனைவியும்...

கொசுவத்தி நெருப்பால் பிரிட்ஜ் வெடித்து விபத்து: முதியவர் உயிரிழப்பு
திருவாரூரில் பிரிட்ஜ் வெடித்து முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. வயது 82. இவருக்கு நவநீதம் என்ற மனைவியும் ஸ்டாலின் என்ற மகனும் உள்ளனர். நேற்றிரவு வழக்கம்போல பக்கிரிசாமி வீட்டில் உறங்கியுள்ளார். பக்கிரசாமி படுத்திருந்த இடத்திற்கு அருகில்தான் வீட்டின் பிரிட்ஜ் இருந்திருக்கிறது. ‘விசா தடை; மைதானங்கள் குழப்பம்; ஆடியன்ஸ்க்கு நோ’-  கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஐபிஎல்  எப்போதும் இரவு உறங்க செல்வதற்கு முன் பக்கிரிசாமி பிரிட்ஜ் மின் இணைப்பை துண்டித்து வைப்பது வழக்கம். அதனைப்போன்று நேற்றும் பிரிட்ஜின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிரிட்ஜின் மேல்புறம் கொசுவத்தி ஏற்றி வைத்துள்ளார். கொசுவத்தியில் இருந்த நெருப்பானது பிரிட்ஜ் மேல் போடப்பட்டிருந்த துணியில் பற்றி உள்ளது. முழுவதுமாக அந்த துணி எரிய ஆரம்பித்தவுடன் பிரிட்ஜ் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அங்கு படுத்திருந்த பக்கிரிசாமி உடல் கருகி உயிரிழந்தார். கொரோனா எதிரொலி: இந்தியர்களுக்கு விசாவை நிறுத்தியது அமெரிக்கா!  இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பக்கிரிசாமி உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்