கட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஓட்டுநர்..!

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் உசிலம்பட்டியில் லாரி ஒட்டுநராக பணியாற்றி...

கட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஓட்டுநர்..!
உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் உசிலம்பட்டியில் லாரி ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வீட்டிற்கு காய்கறி வாங்க உசிலம்பட்டி ஜவுளிக்கடை தெருவிற்கு சென்றுள்ளார் அப்போது, கீழே கட்டுக்கட்டாக 4 லட்சம் ரூபாய் சாலையில் கிடந்ததைக் கண்ட பாண்டி அதை எடுத்து சற்று தொலைவில் பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திடம் வழங்கினார்.   பணத்தை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் உசிலம்பட்டி டி.எஸ்.பி. ராஜாவிடம் வழங்கிய நிலையில் கீழே கிடந்த பணத்தை மனிதாபிமானத்தோடு எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர் பாண்டிக்கு டி.எஸ்.பி. ராஜா பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் இந்த பணம் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பணக்கட்டில் இருந்த வங்கி ரசீதை வைத்து வங்கிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது உசிலம்பட்டி செல்வி மகால் தெருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவருடைய பணம் என்பதும் சற்று நேரத்திற்கு முன்பு தான் வங்கியிலிருந்து எடுத்து சென்றார் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு வங்கிக்கு நேரில் வரவழைத்து உரியவரிடம் டி.எஸ்.பி.ராஜா பணத்தை ஒப்படைத்தார்.