குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் : இரண்டு மகள்களுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு

மதுராந்தகம் அருகே கணவர் குடித்துவிட்டு சண்டை போட்டதால் மனமுடைந்த மனைவி இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீரணகுண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தச்சு தொழில்...

குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் : இரண்டு மகள்களுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
மதுராந்தகம் அருகே கணவர் குடித்துவிட்டு சண்டை போட்டதால் மனமுடைந்த மனைவி இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீரணகுண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36). இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படித்து வந்த திவ்யபாரதி (12), 5ஆம் வகுப்பு படித்து வந்த கவிஸ்ரீ (10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பார்த்தசாரதியின் குடிப்பழக்கத்தால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த வசந்தி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே சென்றுள்ளார். பின்னர் செய்வதறியாது ஊருக்கு வெளியே இருந்த கிணற்றில் மகள்களுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது இந்த விபரீத செயலால் விபரம் அறியாத சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் வீரணகுண்ணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஏ’ வகை ரத்தத்தை கொரோனா எளிதில் தாக்குமா?: ஆய்வில் அதிர்ச்சி தகவல்