குடிபோதையில் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்..!

தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட வடமாநில இளைஞர் ஒருவர் வால்பாறை அரசு ‌மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது கோபால் பங்கட் என்ற அந்த இளைஞர், கடையொன்றில் கத்தியை வாங்கியுள்ளார்....

குடிபோதையில் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்..!
தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட வடமாநில இளைஞர் ஒருவர் வால்பாறை அரசு ‌மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது கோபால் பங்கட் என்ற அந்த இளைஞர், கடையொன்றில் கத்தியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த கத்தியை மூன்றுமுறை த‌னது வயிற்றில் அந்த நபர் குத்திப்பார்த்துள்ளார். குடிபோதையில் இருந்த அந்த இளைஞர், தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டுள்ளது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சாலையோர கடைகளில் கத்திபோன்ற ஆயுதங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக வால்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கே வேலை செய்வதற்காக வடமாநிலத்து இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். வாரசந்தை விடுமுறை நாளான நேற்று கத்தியால் வயிற்றில் குத்திய காயத்துடன் வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு வடமாநில இளைஞர் ஒருவர் கொண்டுவரப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முகம் தெரியாத ஒருவர் தன்னை வயிற்றில் கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.  சிறுமி பீர் பாட்டில் முனையில் பாலியல் வன்கொடுமை..! தொடரும் அவலம் காயம் அடைந்தவர் பெயர் கோபால் பங்கட் என்பதும் அவர் வால்பாறை அருகில் உள்ள சோலையர் எஸ்டேட் பகுதியில் தோட்ட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு வால்பாறை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சியைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போயினர். அதில் சாலையோர கடையில் ஒன்றில் இருந்து அந்த இளைஞர் கத்தியை வாங்குவது போல் கத்தியை எடுத்து பார்க்கிறார். பின்னர் மூன்று முறை வயிற்றில் குத்துவது பதிவாகி இருந்தது. குடிபோதையில் கோபால் பங்கட் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டதும் தெரியவந்தது.