“கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து மிரட்டுகின்றனர்”: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க ம

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர், கோட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா (34). இவரது கணவர் மகேந்திரன். தனது கணவர் மகேந்திரனை அவரது...

“கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து மிரட்டுகின்றனர்”: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க ம
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர், கோட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா (34). இவரது கணவர் மகேந்திரன். தனது கணவர் மகேந்திரனை அவரது உறவினர்கள் கடத்திவைத்து சொத்துக்காக மிரட்டுவதாகவும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் தங்கள் மீதே பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் வனிதா குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது 3 குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வனிதா, திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை உடல் முழுவதிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வனிதாவை தடுத்துநிறுத்தி அனுப்பிவைத்தனர். நேற்றைய தினம் இருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நிலையில், இன்று பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனாலும் இன்று பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்..!