காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் பிரத்யேக ஹெல்மெட் தயாரிப்பு!!!

சீனாவில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில்,காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் காவல்துறையினருக்காக பிரத்யேக ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஷென்ஷென் (Shenzhen) பகுதியை சேர்ந்த குவான் ஜி (Kuang-chi) நிறுவனம் இந்த...

காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் பிரத்யேக ஹெல்மெட் தயாரிப்பு!!!

சீனாவில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில்,காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் காவல்துறையினருக்காக பிரத்யேக ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஷென்ஷென் (Shenzhen) பகுதியை சேர்ந்த குவான் ஜி (Kuang-chi) நிறுவனம் இந்த ஹெல்மெட்டை உருவாக்கி உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் இன்பரா - ரெட் (infra red) கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த கேமரா சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் உடம்புச்சூட்டினை எளிதாக கணக்கில் கொள்ளும். யாரேனும் காய்ச்சல் இருந்தால் அதுவும் அவர்கள் 5 மீட்டர் சுற்றளவில் இருந்தால் ஹெல்மெட்டில் ஒலி எழுப்பும். இதன் மூலம் கூட்டம் நிறைந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.