கொரோனா அச்சம்: தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள்..!

  தேனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.டி நிறுவன ஊழியர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

கொரோனா அச்சம்: தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள்..!
  தேனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.டி நிறுவன ஊழியர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை இதனால் கொரோனா பாதிப்பை மாநில பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே மக்கள் கூடும் இடங்களில் கொரோனா எளிதாக பரவுவதால் பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐடி உட்பட பல நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பெங்களூரில் ஐடி நிறுவனம் நடத்தும் ஊழியர்கள் சிலர், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று தங்கள் குழுவோடு தங்கி வேலை பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேனி அனுமந்தம்பட்டி கிராமத்தில் தங்கி பணிபுரியும் இவர்கள் தங்களுக்கு இந்த இயற்கையான சூழ்நிலை வேலை பார்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருப்பதாக கூறுகின்றனர்.   இந்திய வம்சாவளி பெண்ணுடன் மேக்ஸ்வெல்லுக்கு திருமண நிச்சயதார்த்தம்...! இதுகுறித்து குழுவில் உள்ள ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் கூறும்போது “ முதற்காரணம் பயம். அதனாலேயே நாங்கள் இங்கு வந்து பணிபுரிகிறோம். நகர்ப் புறங்களில் கொரோனா அபாயம் அதிகமாக இருக்கிறது. கிராமப் புறங்களில் அந்த அச்சம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. ஒரு முறை பணிநிமித்தம் காரணமாக நெதர்லாந்து சென்றேன். அப்போது அங்கு கிராமத்தில் இருந்து பணிபுரியும் வகையில் சூழ்நிலை அமைந்தது. அந்த சூழல் குழுவின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. அங்கு செயல்படுத்தியதை தற்போது இங்கும் செயல்படுத்த நினைத்தோம். இங்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது, நல்லக் காற்றை சுவாசிக்க முடிகிறது. குறிப்பாக கொரோனா அச்சம் இல்லை ” என்றார்.   https://www.youtube.com/watch?v=xYUDTjxNAwg