கொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வெளியீட்டில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடலை ஆசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவன சோதனை பொறியாளர்களை...

கொரோனா எதிரொலி : ஐபோன் 12 வெளியாவதில் தாமதம்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வெளியீட்டில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடலை ஆசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவன சோதனை பொறியாளர்களை ஆசியாவிற்கு பயணம் அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் எதிரொலியாக அனைத்து தொழில் நிறுவனங்களின் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆசியாவிற்கு பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்பிள் போனின் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடல் செல்போன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆசியாவில் தங்கள் பொறியாளர்கள் பயணம் மேற்கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் ஏப்ரல் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5ஜி டெக்னாலஜி வசதி கொண்ட ஐபோன் 12 மாடல் வெளியாவதில் தாமதம் உருவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு எதிரொலி : சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை பக்தர்களுக்கு தடை