கொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..!

கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு அறிவுறுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே டெல்லி,...

கொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..!
கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு அறிவுறுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே டெல்லி, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துவிட்டன. இருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் மார்ச் 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ வகை ரத்தத்தை கொரோனா எளிதில் தாக்குமா?: ஆய்வில் அதிர்ச்சி தகவல்