கொரோனா எதிரொலி : தி.நகரில் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

கொரோனா எதிரொலியாக சென்னை தி.நகரில் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் தோராயமாக 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம்...

கொரோனா எதிரொலி : தி.நகரில் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு
கொரோனா எதிரொலியாக சென்னை தி.நகரில் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் தோராயமாக 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் ஒரு மருத்துவக்குழு தினந்தோறும் 80 வீடுகளை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் எனவும், சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் சென்னையில் உள்ள 2500 தனியார் மருத்துவனைகளின் நிர்வாகத்திடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார். கொரோனா எதிரொலியால் சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு விட்டுள்ளதாகவும், சிறிய கடைகள் திறந்தே இருக்கும் என்றும் மக்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “சேப்பாக்கம் மைதானத்தில் விஜய் ரசிகராக அன்று டான்ஸ் ஆடினேன்”: வீடியோ வெளியிட்ட ரத்னகுமார்