கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்...!

(கோப்புப் புகைப்படம்) கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில்...

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்...!
(கோப்புப் புகைப்படம்) கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார். இதையடுத்து மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள் இந்நிலையில், அவர் திடீரென முகாமில் இருந்து நேற்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் முத்துராஜ் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். மாணவர்களுக்கு வீடு தேடி வரும் மதிய உணவு - மாநில அரசுகளின் உத்தரவு அப்போது தப்பித்துச் சென்ற இளைஞர் காதலி வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் கைது செய்தனர். அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த தன்னை காண காதலி ஆவலாக இருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்தார். பின்னர், காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.